நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிராவில் தேர்வுக்கு பாராகிளைடிங்கில் பறந்து சென்ற மாணவரின் வீடியோ வைரல்

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவின் வை தாலுகாவில் உள்ள Panchgani கிராமத்தைச் சேர்ந்த Samarth Mahangde என்ற மாணவர், தேர்வுக்கு பாராகிளைடிங்கில் சென்ற காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது. 

தேர்வு தொடங்குவதற்கு 15-20 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கிக் கொள்ளாமல்,  Samarth Mahangde பாராகிளைடிங் மூலம் மைதானத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.

தேர்வு மையத்தில் ஒரு வியத்தகு நுழைவுக்காக தனது கல்லூரி பையுடன் வானத்தில் மாணவர் பறப்பது அக்காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

.மாணவர் தேவையான அனைத்து பாராகிளைடிங் கியர்களையும் முழுமையாகப் பெற்றிருந்தார்.

பஞ்ச்கனியில் உள்ள ஜிபி அட்வென்ச்சர்ஸைச் சேர்ந்த சாகச விளையாட்டு நிபுணரான Govind Yewale இதற்கான தீர்வைக் கண்டுபிடித்தார். தனது குழுவுடன்,  Samarth Mahangde போக்குவரத்து நெரிசலில் பறக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். 

இதனால் அவர் தேர்வு நடைபெறும் இடத்தை சரியான நேரத்தில் அடைய முடிந்தது. 

அவர் தனது கல்லூரி அருகே பாதுகாப்பாகத் தரையிறங்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset