நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை ஒதுக்கியதால் நொந்துபோன ஒன்றிய அமைச்சர் 

டெல்லி: 

ஏர் இந்தியா விமானத்தில் ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதால் நொந்து போய் சமூக ஊடகத்தில் பதிவு போட்டுள்ளார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் சவுகானுக்கு விளக்கம் அளித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

போபால் – டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கையிலேயே சிவ்ராஜ் சிங் சவுகான் பயணித்துள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு ஏற்பட்ட அசவுகரியத்தை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிவிட்டுள்ளார். உட்காருவதில் உள்ள அசவுகரியத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் முழு தொகையையும் வசூலித்த பிறகு பயணிகளை மோசமானதும் சங்கடமானதுமான இருக்கைகளில் அமர வைப்பது தவறு அல்லவா?

Passenger slams Air India after paying extra and getting broken seats.  Airline responds

இது பயணிகளை ஏமாற்றுவதாக இல்லையா? எதிர்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது பயணிகளின் அவசரத்தை தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் சவுகானுக்கு விளக்கம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset