
செய்திகள் இந்தியா
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 முதல் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறுகையில், "ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்" என்று தெரிவித்தார்.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தின் அருகே உள்ள எஸ்எல்பிசி சுரங்கப் பாதையில் ஒரு பகுதி சனிக்கிழமை காலையில் இடிந்து விழுந்தது. குறிப்பாக 14-வது கிலோ மீட்டரில் சுரங்கத்தின் இடது பக்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து ஏற்பட்டபோது அங்கு பல தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்" என்று தெரிவித்தனர். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரங்கப் பணி, நான்கு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:52 pm
ஒடிசா அருகே நிலநடுக்கம்
February 25, 2025, 4:24 pm
மகாராஷ்டிராவில் தேர்வுக்கு பாராகிளைடிங்கில் பறந்து சென்ற மாணவரின் வீடியோ வைரல்
February 24, 2025, 12:19 pm
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டார்
February 23, 2025, 12:30 pm
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து
February 22, 2025, 7:04 pm
ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை ஒதுக்கியதால் நொந்துபோன ஒன்றிய அமைச்சர்
February 20, 2025, 4:48 pm
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்
February 18, 2025, 4:24 pm