நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டி.சி.பி. சசிகலா தேவி சுப்ரமணியம் பணி ஓய்வு: மலேசிய காவல் துறையின் மறக்க முடியாத தலைவி

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய காவல் துறையில் 35 ஆண்டு கால சேவைக்கு பின், சிலாங்கூர் மாநில போலீஸ் துறை துணைத் தலைவர் டி.சி.பி. டத்தோ’ சசிகலா தேவி சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெற்றார்.

அவர் தனது போலீஸ் பயணத்தை 1989 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு பதவிகளில் கடமையாற்றிய அவர், கடைசி இரண்டு ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில போலீஸ் துறை துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றினார்.

அவரது பொறுப்புணர்வு, தன்னலமற்ற சேவை, மற்றும் தீர்க்கமான முடிவுகள் காவல் துறையில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டு வந்துள்ளன.

நேற்று, சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில், அவரது பணி ஒய்வு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் சிலாங்கூர் காவல் தலைவர் டத்தோ’ ஹுசைன் ஓமர் கான், பல்வேறு உயர் அதிகாரிகள்,  குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

“சசிகலா தேவி என்பது பெயரல்ல, அது ஒரு பிரசித்தி பெற்ற தலைமைப் பண்புக்குரிய அடையாளம். அவரது சேவை, நெடுங்காலம் காவல் துறையில் நினைவுகூரப்படும்,” என்று டத்தோ’ ஹுசைன் உரையில் தெரிவித்தார்.

பணி ஓய்விற்குப் பின், அவர் சமூக சேவையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் காவல் துறையிலிருந்து கற்றதையும் சமூகத்திற்கு பயனாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சசிகலா தேவி – ஒரு வீரத்திற்குரிய காவலர், ஒரு சிறந்த தலைவி, ஒரு மறக்க முடியாத வழிகாட்டி!

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset