நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் நிகழ்ந்த தீ விபத்தில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கம்பளங்கள் தீயில் எரிந்து நாசமாகின: நிர்வாக இயக்குநர்

நீலாய்:

நீலாய் நிகழ்ந்த தீ விபத்தில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கம்பளங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கார்பெட் பிரிமா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே. ராஜேஷ் இதனை கூறினார்.

நீலாய் 3இல் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து நிகழந்தது.

ஒட்டுமொத்த தொழிற்சாலையும் தீயில் எரிந்து சாம்பலானது. 

இந்நிலையில் இவ்விபத்து குறித்து ராஜேஷ் கூறியதாவது,

நான் வீட்டில் இருந்த போது சம்பவம் குறித்து பாதுகாவலரிடமிருந்து அழைப்பு வந்தது.

காலை 8 மணிக்கு கடை திறக்கும்போது டிக்டோக்கில் நேரலைக்குச் செல்வதற்குத் தயாராக, பிரதான சுவிட்சை இயக்குமாறு ஊழியரிடம் சொன்னேன்.

திடீரென்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, மெயின் சுவிட்சை ஆன் செய்தபோது ஒரு  சத்தம் கேட்டதாகக் கூறினார்.

உடனே நான் அவரை வெளியே வந்து நிலைமையைக் கண்காணிக்கச் சொன்னேன்.

சாலையின் மறுபக்கத்தில் இருந்து வந்த ஒருவர், தொழிற்சாலையில் இருந்து புகை வருவதாகக் கூறி பாதுகாப்புக் காவலரிடம் சத்தமிட்டார். 

பின்னர் அவர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியவில்லை. தீயணைப்புத் துறை இன்னும் விசாரித்து வருகிறது. 

ஆகையால் முதலில் தீயணைப்புத் துறையினர் தங்கள் வேலையைச் செய்யட்டும்.

ரமலான், நோன்பு பெருநாளுக்கு தயாராகும் வகையில் தனது நிறுவனம் கம்பளங்களின் விநியோகத்தை அதிகரித்துள்ளது.

ஆனால் அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கிட்டத்தட்ட 30 மில்லியன் ரிங்கிட் இழப்புகள் ஏற்பட்டுள்ளது  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset