நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் 3 இல் உள்ள கம்பள (கார்பெட்) தொழிற்சாலையில் தீ விபத்து தீயை அணைக்க போராடும் தீயணைப்புப் படை வீரர்கள்

நீலாய்:

நீலாய் 3 இல் உள்ள கம்பள (கார்பெட்) தொழிற்சாலை தீயால் முழுமையாக அழிந்தது.

கார்பெட் பிரிமா நீலாய் 3இல் மிகவும் பிரபலமான தொழிற்சாலையாக அது விளங்கி வருகிறது.

இந்த கார்பெட் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

காலை முதல் தொழிற்சாலை தீயால் கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் நீலாய் சுற்று வட்டாரமே கரும்புகையால் சூழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைப்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஐந்து தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் தீ தொழிற்சாலை முழுவதும் பரவலாக எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கம்பள தொழிற்சாலை முழுமையாக தீயில் எரிந்து சாம்பலானது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset