நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல்.- காராக் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும்

ஷா ஆலம்:

கே.எல்.-காராக் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இத்திட்டம்  நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உள்கட்டமைப்புத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

மொத்தம் 45.3 கிலோ மீட்டர்  நீளமுள்ள இந்தத்  திட்டத்தின் கீழ்  கோம்பாக் டோல் சாவடியிலிருந்து பெந்தோங் வரை இரு திசையிலும் ஒரு தடம் கூடுதலாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

கே.எல்.கே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. 

இதன் முதற்கட்ட பணிகள் கடந்த மாதம் தொடங்கி எதிர்வரும் 2029 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது நெடுஞ்சாலை பயனர்களுக்கு குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை சமாளிப்பதிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதிலும்  பெரும் நன்மை பயக்கும் என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் தெரிவித்தார்.

கே.எல்.- காராக் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வது  குறித்து கோம்பாக் செந்தியா உறுப்பினர்   ஹில்மான் இடாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்திற்கு கூடுதல் நிலத்தை  கையகப்படுத்தாமல் தற்போதுள்ள நெடுஞ்சாலை நடைபாதை அல்லது சீரமைப்பிற்கு உட்பட்ட பகுதியில் விரிவாக்கப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று இஷாம் மேலும் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset