
செய்திகள் இந்தியா
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்
புதுடெல்லி:
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:52 pm
ஒடிசா அருகே நிலநடுக்கம்
February 25, 2025, 4:24 pm
மகாராஷ்டிராவில் தேர்வுக்கு பாராகிளைடிங்கில் பறந்து சென்ற மாணவரின் வீடியோ வைரல்
February 24, 2025, 12:19 pm
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டார்
February 23, 2025, 12:30 pm
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து
February 22, 2025, 7:04 pm
ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை ஒதுக்கியதால் நொந்துபோன ஒன்றிய அமைச்சர்
February 22, 2025, 6:05 pm
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
February 18, 2025, 4:24 pm