நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன: ஜுல்கிஃப்லி 

கோலாலம்பூர்: 

தற்போது மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் அதிகரித்து வருவது ஒரு பெரிய சவாலாக மாறி வருவதாக டத்தோஶ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.

இது மக்கள் மத்தியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனையாகும் என்று அவர். 

மக்கள் தங்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு “War On Stigma” என்ற பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்துள்ளது.

மனநலப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனநலப் பிரச்சனைகள் உள்ள அதிகமான மக்கள் நிபுணர்களின் உதவியை நாட முன்வரும் வகையில் இக்கண்ணோட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த எதிர்மறையான கருத்துகள்தான் மனநோயாளிகள் சிகிச்சை பெற மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ காரணமாகிறது என்று அவர் விவரித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset