நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது போலிஸ் புகாரும் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்:  அ.சிவநேசன் 

ஈப்போ: 

இனிவரும் காலங்களில் யாரேனும் பொறுப்பற்ற முறையில் இனதுஷ்பிரயோகம் குறித்து அறிவிப்பு அல்லது அறிக்கை வெளியிட்டால், அவர்கள் மீது ஒற்றுமைத்துறை இலாகாவின் இயக்குநர் போலீஸ் புகார் செய்வதோடு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இங்கு நடைபெற்ற ஒற்றுமைத்துறை பயிற்சிப் பட்டறையை தொடக்கி வைத்தபோது பேராக் மாநில ஒற்றுமை, மனிதவளம், சுகாதாரம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து அரசியல்வாதிகள் போலீஸ் புகார் செய்தால் ஒரு தலைப்பட்சமாக கருதப்படுகிறது. ஆகையால், இன துஷ்பிரயோகம் செய்யும் நபர் மீது ஒற்றுமைத்துறை இலாகாவின் இயக்குநர் போலிஸ்புகார் செய்தால் ஏற்புடையது. அத்துடன், அவர் ஓர் அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒற்றுமைத்துறை பயிற்சிப்பட்டறையில் செக்‌ஷன் 151,152, 153 பற்றி விரிவான விளக்கமளிக்கப்படும். குறிப்பாக, தேசிய மொழிக்கு முன்னுரிமை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

செக்‌ஷன் 153 பிரிவின் கீழ் பூமிபுத்ராவிற்கு இந்நாட்டில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்ற இனத்தவருக்கும் இந்நாட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இன ஒற்றுமையை பேணி காப்பதில் நாம் தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு ஆய்வு குழு ஒன்று நியமனம் செய்யப்படுவர். இவர்கள் முழு ஆய்வு குறித்து பேராக் மந்திரி பெசாருக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடுவர். இவர் மேற்கொள்ளும் ஆய்விற்கும் ஏற்பாட்டிற்கும் மாநில அரசு 25 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போது பேராக் மாநிலத்தில் 52 சதவீதத்தினர் முஸ்லி்ம் சமுகத்தினரும், 48 சதவீதத்தினர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஆகையால், இப்பயிற்சி பட்டறையில் இடைநிலைப்பள்ளி உயர்கல்விக்கூட மாணவர்கள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர்.பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset