நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநில அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஹஜிஜி நோர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா: 

தனது அரசாங்கத்திற்கு மாநிலத்தைத் தொடர்ந்து வழிநடத்தவும், சபா மாஜு ஜெயா திட்ட வரைபடத்தை செயல்படுத்தவும் மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு சபா மக்களை அம்மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் கேட்டுக் கொண்டார்.

மாநில அரசு மக்களுக்கும் சிறந்த ஒரு தெளிவான கொள்கையை உருவாக்கியுள்ளது என்று சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் பேசிய ஹஜிஜி தெரிவித்தார். 

பொதுமக்களின் தற்போதைய தேவைகள்களுக்கு ஏற்ப சபா மாஜு ஜெயா திட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளோம்

முழுமையான முன்னேற்றத்தையும் சமூகத்தின் ஒவ்வொருவரின் நல்வாழ்வையும் கருத்தில் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  சபா மாஜு ஜெயா திட்ட வரைபடத்தைச் செயல்படுத்துவதை வெற்றியடையச் செய்வோம் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset