நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் குற்றச் சம்பவங்கள் 12 விழுக்காடு குறைவு

ஷா ஆலம்:

2024-ஆம் ஆண்டு சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

முறையான ரோந்து பணிகள், குற்றத் தடுப்பு முயற்சிகள் ஆகிய நடவடிக்கைகளால் இந்தக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். 

குற்ற விகிதங்கள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படும் போது சூழலில் குறிப்பாக குற்றப் பகுதிகளில், ரோந்துகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

குற்ற வகைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் முறையான குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. 

தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக கிள்ளான் இருப்பதாக வெளிவந்துள்ள அறிக்கைகள் குறித்து, மதிப்பீட்டில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களை காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹுசைன் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset