நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் அதிகரிக்கும் வனவிலங்கு கடத்தல் நடவடிக்கைகள்

சிப்பாங்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகடத்தல் நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகிறது.

இது உள்ளூர் வனவிலங்களை கடத்தப்படுவது மட்டும் அல்ல.

மாறாக இந்தியா, ஆப்பிரிக்க கண்டம், லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்காவிலிருந்து  உள்ள பாலூட்டிகள், ஊர்வன, கோழிகளை கடத்தும் முயற்சிகளையும் கேஎல்ஐஏ   பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கேஎல்ஐஏ வழியாக புறப்பட்ட  இந்திய சுற்றுலாப் பயணி இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் போலிசாரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தங்கள்  துணி பெட்டியில் கிப்பன் வகையான குரங்குகளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி கேஎல்ஐஏவில் 52 கோம்மன் மார்மோசெட்டுகள் எனப்படும் அரியவகை குரங்குகளும் கைப்பற்றப்பட்டது.

இதற்கு முன்பு 30 குட்டி முதலைகளையும் 14 இந்திய நட்சத்திர ஆமைகளையும் கடத்த முயன்ற  ஒரு வெளிநாட்டவரும் கேஎல்ஐஏவில்  கைது செய்யப்பட்டார்.

புதியதாக கேஎல்ஐஏ 2 முனையம் வழியாக 4,386 பன்றி மூக்கு எனும் அரிய வவை ஆமைகளை கடந்த முயன்ற இரண்டு உள்ளூர் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் அனைத்தும் வியட்நாமின் ஹனோய் செல்லும் விமானத்தில் ஏறும்போது அவர்கள் எடுத்துச் சென்ற ஏழு துணிகளில் அடைக்கப்பட்டிருந்தன என்பது தான்.

முறையே 43, 34 வயதுடைய இரண்டு உள்ளூர் பெண்களின் கடத்தல் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

தீபகற்ப மலேசியா வன விலங்கு பாதுகாப்பு இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset