
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்: அமைச்சர் கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
கெடாவில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங் மாநில ஜெராம் தோட்டத் தமிழ்பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த மூன்று தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
கல்வியமைச்சோடு இணைந்து இப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு தமது தரப்பு நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என நம்புவதாக அமைச்சர் தமதறிக்கையில் கூறினார்.
வரும் வாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரோடு சந்திப்புகள் நடத்தப்படும்.
தற்போது சவால்களை எதிர்நோக்கும் மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகள் சுமூகமான தீர்வை எட்டவும்,
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடையவும், தாம் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தமதறிக்கையில் உறுதியாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:44 pm
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
February 21, 2025, 6:43 pm
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விசாரணையில் சிங்கப்பூரின் உதவி தேவை: எம்ஏசிசி அதிகாரி
February 21, 2025, 1:33 pm
டி.சி.பி. சசிகலா தேவி சுப்ரமணியம் பணி ஓய்வு: மலேசிய காவல் துறையின் மறக்க முடியாத தலைவி
February 21, 2025, 1:29 pm
பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர்
February 21, 2025, 1:27 pm
சிலாங்கூரில் குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 185 பிள்ளைகள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
February 21, 2025, 1:26 pm