
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் - அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்த மலேசியா விரும்புகிறது: முஹம்மத் ஹசான்
கோலாலம்பூர்:
ஆசியான் - அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்துவதில் மலேசியா அதிக ஆர்வத்தை கொண்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
மலேசியா எந்த நாட்டிற்கும் சார்புடையதாக இல்லை என்பதைக் காட்ட,
ஆசியான் - அமெரிக்கா உச்ச நிலை மாநாட்டை இந்த நாட்டிலோ அல்லது அமெரிக்காவிலோ நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரம் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஆசியான் - ஜிசிசி - சீனா உச்சி நிலை மாநாடு உள்ளது.
அதனால் எந்த ஒரு பக்கத்தையும் நோக்கிச் சாய்ந்துவிடாமல் சமநிலையை ஏற்படுத்த மலேசியா முயற்சிக்கிறது.
எனவே, ஆசியான் ஒருங்கிணைந்த ஆசியானாக தொடர்ந்து திசையை இயக்கும்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் மலேசியா நடுநிலையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
சிறப்பு உச்ச நிலை மாநாட்டு குறித்து உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கையாளும் போது அவர் நம்மிடம் என்ன உள்ளது என்பதை கேட்க விரும்புவார்.
ஆகையால் இது குறித்து முறையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மக்களவையில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில் அமைச்சர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm