
செய்திகள் இந்தியா
ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி மீதான ஊழல் புகார்: இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம்
புதுடெல்லி:
அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான சுமார் ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் புகார் வழக்கில் அமெரிக்காவின் பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையம், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து, தனது புகாரை அதானிக்கு வழங்கும் நடைமுறைக்காக இந்தியாவின் சட்ட அமைச்சகத்தின் உதவியை நாடி இருப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஒழுங்குமுறை ஆணையம், ஹேக் சேவை மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உதவி கோரியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. என்றாலும் இதுகுறித்து அதானி குழுமமோ அல்லது சட்ட அமைச்சகமோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு சில நாட்களுக்கு பின்பு இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. தனது அமெரிக்கப் பயணத்தின் போது அதிபர் ட்ரம்புடன் அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இருப்பினும் 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:52 pm
ஒடிசா அருகே நிலநடுக்கம்
February 25, 2025, 4:24 pm
மகாராஷ்டிராவில் தேர்வுக்கு பாராகிளைடிங்கில் பறந்து சென்ற மாணவரின் வீடியோ வைரல்
February 24, 2025, 12:19 pm
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டார்
February 23, 2025, 12:30 pm
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து
February 22, 2025, 7:04 pm
ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை ஒதுக்கியதால் நொந்துபோன ஒன்றிய அமைச்சர்
February 22, 2025, 6:05 pm
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
February 20, 2025, 4:48 pm
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்
February 18, 2025, 4:24 pm