நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சில சொஸ்மா குற்றங்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு ஆலோசிக்கின்றது: சைஃபுடின் 

கோலாலம்பூர்: 

பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகளுக்கான சொஸ்மா சட்டத்தின் கீழ் சில குற்றங்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

பெண்கள், சிறார் அல்லது நோய்வாய்ப்பட்ட தனிநபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தவிர, பெரும்பாலான குற்றங்களுக்குத் தற்போது ஜாமீன் வழங்கப்படுகிறது. 

விசாரணைகளை விரைவுப்படுத்த ஊழல் மற்றும் மனித கடத்தல் வழக்குகளைக் கையாளும் நீதிமன்றங்களைப் போலவே ஒரு பிரத்யேக சொஸ்மா நீதிமன்றத்தையும் அரசாங்கம் நிறுவக்கூடும் என்று சைஃபுடின் கூறினார்.

விடுவிக்கப்பட்ட கைதிகள் மேல்முறையீடு நிலுவையில் காவலில் இருக்க வேண்டும், 28 நாட்கள் தடுப்புக் காவல் விதி ஆகியவைக் குறித்தும் மறு ஆய்வு செய்யப்படும். 

தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சிறப்பு பணிக்குழு தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சொஸ்மா சட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக சைஃபுடின் நாடாளுமன்றத்தில் 
இன்று கூறினார்.

தேச நிந்தனை சட்டம் 1948 உட்பட அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆறு சட்டங்களை இந்த மறுஆய்வு உள்ளடக்கியது என்றும் அவர் விளக்கினார்.

2012-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

சொஸ்மாவின் கீழ், காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கும் ஒருவரைக் கைது ஆணை இன்றி கைது செய்து தடுத்து வைக்கலாம்.

இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான பாதுகாப்புச் சட்டங்களில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சைஃபுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset