நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்படுவதால் மக்கள் பயன் பெறுவார்கள்: குணராஜ்

கிள்ளான்:

கிள்ளான் தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்படுகிறது. இது சுற்று வட்டார மக்களுக்கு பெரும் பயனையளிக்கும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

25 தாமான்கள் அதாவது குடியிருப்பு பகுதிகளை கொண்ட இடமாக தாமான் செந்தோசா விளங்குகிறது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

மருத்துவமனை, பள்ளிகள், ஆலயங்கள், வழிபாட்டுத் தளங்கள், வங்கிகள், எல்ஆர்டி ரயில், நெடுஞ்சாலைகள் என அனைத்தும் இங்கு உள்ளன.

ஆனால் இவ்விடம் மட்டும் தாமான் செந்தோசாவாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் தாமான் செந்தோசாவை பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு தற்போது அதிகாரப்பூர்வமாக பண்டார் செந்தோசாவாக பெயர் மாற்றம் கண்டுள்ளது.

வரும் பிப்ரவரி 22ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு பண்டார் செந்தோசாவின் அறிமுக விழா நடைபெறவுள்ளது.

பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்படுவது இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். இப் பகுதியில் உள்ள சொத்துடமைகளின் மதிப்பு உயரும். 

வெள்ள உட்பட இதர பிரச்சினைகளுக்கு கிள்ளான் மாநகர் மன்றம் கவனம் செலுத்தும். போலிஸ் பாதுகாப்புகள் அதிகரிக்கப்படும். 

அதே வேளையில் இதர மேம்பாட்டு திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும். குறிப்பாக தாமான் செந்தோசாவின் அடையாளம் மாறும். மக்களின் சிந்தனையும் மாறும்.

இதுவே இந்த அந்தஸ்து உயர்த்துவதற்கான முக்கிய நோக்கம் என்று குணராஜ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset