நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டில் இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

சிரம்பான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

சிப்பாங்கில் சோளம் இந்தியர்களுக்கு விற்கப்படாது என வியாபாரி ஒருவர் இழிவான வார்த்தைகளால் அறிவிப்பு பலகை வைத்திருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சம்பத்தில் தொடர்புடைய வியாபாரியை போலிசார் கைது செய்து போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டாலும் அவர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

மேலும் இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக சமூக ஊடகங்களிலும் நிலவும் இதுபோன்ற இனவெறி சர்ச்சைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதன் வாயிலாக இனவெறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset