நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 பேர் மரணம் ஊக்க போதை மருந்துகளே காரணம்: டத்தோ ஹுசைன் ஒமார் கான்

ஷா ஆலம்:

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 பேர் மரணம் ஊக்க போதை மருந்துகளே முக்கிய காரணமாகும்.

சிலாங்கூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பண்டார் சன்வேயில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது மூன்று பேர் மரணமடைந்தனர்.

​​ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூன்று பேர் இறந்ததாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணையை முடிக்க மற்றொரு பாதிக்கப்பட்டவரின் நோயியல் அறிக்கைக்காக போலிஸ் இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.

இதுவரை 53 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

விசாரணை முடிந்ததும் மரண விசாரணை அதிகாரியிடம் பரிந்துரைக்கப்படும்  என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset