நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கைதி பன்னிர் செல்வத்தை விடுவிக்க காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம் கடைசி நிமிட வேண்டுகோள் விடுத்துள்ளது

சிங்கப்பூர்:

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நாளை தூக்கிலிடப்படவுள்ள மலேசியாவைச் சேர்ந்த பன்னிர் செல்வத்தின் மரணதண்டனையை நிறுத்துமாறு காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம் (CLA) சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

36 வயதான பன்னிர், போதைப்பொருள் கடத்தல்காரராக செயல்பட்டதற்காக 2017 ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 

சிங்கப்பூர் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் அவருக்குக் கட்டாய மரணத் தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உண்மையான கடத்தல்காரர் பற்றிய தகவல்களை வழங்க 
அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் மரண தண்டனையிலிருந்து அவரைத் தப்புவிக்கக்கூடிய கணிசமான உதவிச் சான்றிதழ் அவருக்கு வழங்க மறுக்கப்பட்டது.

அவரது கருணை மனுவைச் சிங்கப்பூர் அதிபர் நிராகரித்தார்.

இந்நிலையில்,  சிங்கப்பூர் அதன் நடைமுறைகளை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைத்து, சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் CLA மீண்டும் வலியுறுத்தியது. 

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது என்று CLA கூறியது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset