நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டினரின் 12 கடப்பிதழ்களை இடுப்பில் மறைத்து வைத்திருந்த கேஎல்ஐஏ குடிநுழைவு அதிகாரி சிக்கினார்

சிப்பாங்:

அந்நிய நாட்டினரின் 12 கடப்பிதழ்களை இடுப்பில் மறைத்து வைத்திருந்த கேஎல்ஐஏ குடிநுழைவு அதிகாரி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி வேலையில் தூங்கும்போது தனது கால்சட்டையின் இடுப்பில் அக் கடப்பிதழ்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இது கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சாத்தியமான ஊழல், ஆவண மோசடி கும்பல் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.

மற்றொரு குடிவரவு அதிகாரி தனது இடைவேளை நேரத்திற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த தனது சக ஊழியரின் செயல்களை சந்தேகத்திற்குரியதாகக் கருதியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

கடந்த ஜனவரி 7ஆம் தேதியிட்ட போலிஸ் அறிக்கையில்,

டெர்மினல் 2 செயல்பாட்டு அலுவலகக் கூட்ட அறையில் ஒரு அதிகாரி தூங்குவது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset