நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக  அரசாங்கம் கடந்த ஆண்டு 44 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளது: ஷலேஹா

கோலாலம்பூர்:

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக  அரசாங்கம் கடந்த ஆண்டு 44 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளது.

பிரதமர் துறையி கூட்டரசுப் பிரதேச  அமைச்சர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமைச்சரவை அமைச்சர்கள் 236 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர்.

இப்பயணங்களுக்கான மொத்தச் செலவு 44 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் மலேசியாவை ஒரு உறுப்பு நாடாக உள்ளடக்கிய வழக்கமான, திட்டமிடப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமைச்சரவை உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொண்டனர்.

இதில் வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மது ஹசான் அதிகபட்சமாக 39 முறை பயணம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் (19), முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ருல் அஜீஸ் (18), சுற்றுலா, கலாச்சார அமைச்சர் டத்தோஶ்ரீ  தியோங் கிங் சிங் (15) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் எப்போதும் நடைமுறையில் உள்ள நிதி நடைமுறைகளுக்கு இணங்கும் என்று அவர் நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset