நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஆர்டி ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள கார் நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் விவாதிப்பேன்: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைப்பூலோ:

எம்ஆர்டி ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள கார் நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் விவாதிப்பேன்.

சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சுங்கைபூலோ குவாசா சென்ட்ரல், குவாசா டாமன்சாரா மாஸ் ரேபிட் டிரான்சிட் (எம்ஆர்டி) ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள கார் நிறுத்துமிடங்களை மேப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உள்ளூர் சமூகத்தின் கவலைகளை நான் புரிந்து கொள்கிறேன்.

அதே வேளையில் 2023 பிப்ரவரி 21ஆம் தேதி மக்களவையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் கூட இந்தப் பிரச்சினை குறித்து நான் கேள்வி எழுப்பியுள்ளேன்.

பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு முழுமையாக மேம்படுத்தப்படாததற்கு முதல் மைல், கடைசி மைல் கட்டுப்பாடுகள் முக்கிய காரணம் என்பதை அமைச்சரும் அறிந்துள்ளார்.

எனவே ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பல மாடி கார் நிறுத்துமிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட,

அதன் வசதிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை பரிசீலிக்க போக்குவரத்து அமைச்சருடன் நான் விவாதிப்பேன்.

இதன் வாயிலாக வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதாலும், சீரான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாலும் ஏற்படும் சிக்கலைக் குறைக்க உதவும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஶ்ரீ ரமணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset