நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நிலநடுக்கம்

புதுடெல்லி:

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று காலையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது.

சேத விவரங்கள் குறித்து உடனடித் தகவல் இல்லை.

மக்கள் பதற்றத்தில் கட்டடங்களை விட்டு வெளியே ஓடியதாக தெரியவந்துள்ளது.

தில்லி-என்சிஆர் பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புது தில்லியை மையமாகக் கொண்டு, காலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 

தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக  அதிகாரிஒருவர் கூறினார்.

‘திடீரென அனைத்தும் அதிர ஆரம்பித்தது. எனது வாடிக்கையாளர்கள் அலறினர்’ என புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர். ‘நான் பாதாளத்துக்குள் ஏதோ ரயில் ஓடுகிறது என கருதினேன்’ என ரயில் பயணி ஒருவர் கூறினார்.

‘இது போல இதற்கு முன்பு உணர்ந்தது இல்லை. கட்டிடங்கள் அப்படியே குலுங்கின’ என்கிறார் காசியாபாத் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset