நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிசியின் 100 தொழில் திறன் பயிற்சி திட்டங்களின் வாயிலாக 6,000 பேர் பயன் பெற்றுள்ளனர்: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மை பாராட்டும் மிசி பங்கேற்பாளர் குமரேசன்

பிறை:

மிசியின் 100 தொழில் திறன் பயிற்சி திட்டங்களின் வாயிலாக 6,000 பேர் பயன் பெற்றுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் பயிற்சித் திட்டங்கள் தொடங்கியதில் இருந்து இச்சாதனை பதிவு செய்யப்பட்டது.

மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் சரியான பயிற்சி, வாய்ப்புடன் தனிநபர்கள் தங்கள் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறது.

அத்தகைய வெற்றிக் கதைகளில் ஒன்று, மிசி பங்கேற்பாளரான 18 வயது குமரேசன், 

சமையல் மீதான தனது ஆர்வத்தை நிலையான வாழ்க்கையாக மாற்றியுள்ளார்.

ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்த அவர் சமையல் மீதான தனது பற்று உடனடி வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.

இருப்பினும் பினாங்கின் பிறையில் உள்ள சமையல், மேற்கத்திய உணவுத் துறையில் மிசி  திறன் பயிற்சி திட்டத்தை முடித்த பிறகு, 

அவர் ஒரு மதிப்புமிக்க உணவகத்தில் சமையல் பதவியைப் பெற்றார். அவரது எதிர்பார்ப்புகளை விட நிலையான சம்பளத்தைப் பெற்றார்.

மடானி அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 

18 வயதில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

இப்போது நான் சம்பாதிப்பதன் மூலம் என் குடும்பத்திற்கு உதவ முடியும் என்று குமரேசன் கூறினார்.

அவரது வெற்றி திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. 

அவரது சகாக்கள் பலர் இன்னும் நிலையான வேலைகளைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், குமரேசனின் சாதனை, சரியான திறன்கள் இருந்தால், தொழில் வாய்ப்புகள் எட்டக்கூடியவை என்பதை நிரூபிக்கிறது.

இப்போது வேலை கிடைப்பது கடினம் என்று மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால் மிசி பயிற்சி திட்டத்தின் வாயிலாக எளிதாக ஒரு வேலையைப் பெறலாம்.  நல்ல சம்பளத்துடன் என்று அவர் கூறினார்.

முன்னதாக இப்பயிற்சி கடந்த டிசம்பர் 4 முதல் 8ஆம் தேதி என ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது.

இந்த பயற்சிக்கு பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்  டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவின் வலுவான ஆதரவு கிடைத்தது

அதே வேளையில் அவரது தொகுதியில் இருந்தும் மக்கள் இந்த பயிற்சி அமர்வில் கலந்து கொண்டனர்.

மேலும் அவரது வருகை திறன் அடிப்படையிலான பயிற்சியின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தி உள்ளது.

மேலும் மனிதவள அமைச்சு, எச்ஆர்டி கோர்ப் முன்முயற்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset