நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: 

கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset