நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோளம் விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  சோளம் விவகாரம் தொடர்பில்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இதனை வலியுறுத்தினார்.

மன்னித்து விடுங்கள். இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை என்ற வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இதுபோன்ற செயல்கள் முழு மலாய் சமூகத்தையும் பிரதிபலிக்கவில்லை

மாறாக தீவிரமான ஒரு சில தனிநபர்களை மட்டுமே பிரதிபலிக்கின்றது என்று அவர் கூறினார்.

இதில் ஆபத்து என்னவென்றால், அது மற்ற சமூகங்களிடமிருந்து எதிர்வினையைத் தூண்டக்கூடும்.

உதாரணமாக ஒரு கோபமான மலேசிய இந்திய வர்த்தகர் அதே போன்ற பலகையை வைப்பது,

இறுதியில் அது  விரோதச் சங்கிலியைத் தூண்டக்கூடும் என்று அவர்  கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

அவை தொடர அனுமதிப்பது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அவமானப்படுத்துதல், வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவது மலேசியாவின் சமூக நல்லிணக்கத்தைச் சேதப்படுத்தும்.

இனங்களுக்கு இடையே பிரிவினை, அவநம்பிக்கையின் நெருப்பைத் தூண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset