நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டம்பெல்ஸை மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதை; கேரளத்தில் ராகிங் கொடுமை: 5 பேர் கைது

கோட்டயம்:

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த 5 மூத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்து கொடூரமாக ராகிங் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இளநிலை மாணவரின் ஆடையைக் களைந்து, கட்டிலுடன் சேர்த்து அவரின் கை-கால்களைக் கட்டிவைத்த முதுநிலை மாணவர்கள், காம்பஸ் மூலம் அவரது உடல் முழுவதும் குத்தியுள்ளனர்.

டம்பெல்ஸை மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மாணவர் வலியால் அலறித் துடித்தபோதும், அவரைக் கிண்டல் செய்து விடியோ எடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூத்த  5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset