நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேலும் 119 இந்திய சட்ட விரோத குடியேறிகள் நாடு திரும்பினர்

வாஷிங்டன்:

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக  119 சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.

அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க  அதிபர் டிரம்ப்பை சந்தித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் 18,000க்கும் அதிகமான இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்கட்டமாக 104 இந்தியர்களை, கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி  அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset