
செய்திகள் வணிகம்
காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி நிறுவனம் விலகல்
கொழும்பு:
இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டாலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளது, மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக முதலீட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm