நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரான்ஸில் மார்சே நகரில் புதிய இந்திய தூதரகம் திறப்பு

பாரி: 

பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் இமானுவல் மேக்ரானும் திறந்துவைத்தனர்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றார்.

துறைமுக நகரமான மார்சேக்கு இரு தலைவர்களும் தனி விமானம் மூலம் சென்றனர். , முதலாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை கூட்டாக திறந்துவைத்தனர்.

பின்னர் மார்சே அருகே கேடராச் நகரில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையையும் ITER இருவரும் கூட்டாகப் பார்வையிட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டத்தில் சுமார் 200 இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அதிநவீன அலைஉலைகளை உருவாக்க இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset