
செய்திகள் மலேசியா
இண்டோ - மலேசியச் சாதனையாளர்கள் விருது 2025 விழாவில் டாக்டர் சத்தியாவதிக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டுக்கான இண்டோ - மலேசியச் சாதனையாளர்கள் விருதை வம்சம் கருதரிப்பு மையத்தின் நிறுவனரும் மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளராகவும் திகழும் டாக்டர் சத்தியாவதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருது விழா பிப்ரவரி 2-ஆம் தேதி கோலாலம்பூரில் அமைந்துள்ள International Signature Hotel-லில் மிக விமரசையாக நடைபெற்றது.
கலாச்சாரம், அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச அமைப்பு, INTERNATIONAL FOUNDATION FOR CULTURE, PEACE AND ENVIRONMENT இந்த விருது விழாவை ஏற்பாடு செய்தது.
இனம், மதம், மொழியைக் கடந்து உலகளவில் சமூகச் சேவையில் ஈடுபடுபவர்களை அங்கிகரிக்கும் விதமாக இந்த விருது விழா முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தோற்றுநர் ஆர். அருண் குமார் தெரிவித்தார். இந்த அமைப்பின் இணை தோற்றுநராக ஜானு பிரியா எலிசபெத் செயல்படுகிறார்.
அவ்வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியத்தை அமைத்து தந்த மருத்துவ ஆலோசகராச் செயல்பட்டு வந்த டாக்டர் சத்தியாவதியின் சேவை போற்றும் வகையில் அவருக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தன் மகளுடன் அவர் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், வம்சம் கருதரிப்பு மையம் உருவாகுவதற்கு விழுதாக இருந்த தன் மகள் கீர்த்தனாவிற்கு இந்த விருதினைச் சமர்ப்பணம் செய்வதாகவும் அவர் மேடையில் நெகிழ்ச்சியாகக் கூறினார்.
முன்னதாக, மதுரையில் நடைபெற்ற Femi9 மாதவிடாய் நப்கின் நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளராகத் திகழும் வம்சம் கருதரிப்பு மையத்தின் நிறுவனருமான டாக்டர் சத்தியாவதிக்கு சிறந்த விநியோகஸ்தருக்கான விருதையும் இவ்வாறு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm