நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரான்ஸ் பிரதமர் மக்ரோன் இந்தியப் பிரதமர் மோடியிடம் கைகுலுக்காமல் பின்வரிசை தலைவர்களிடம் கைகுலுக்கி அவமதித்தாரா? தன் வினை தன்னைச்சுடுகிறதா?

பாரிஸ்: 

பிரான்ஸ் பிரதமர் மக்ரோன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கைக்குலுக்காமல் அவமதித்தாரா என்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது 

மக்ரோன் வரிசையாக எல்லாரிடமும் கைகுலுக்கிக் கொண்டே வந்தார். மோடியிடம் வந்தப்பது அவரைத் தவிர்த்துவிட்டு பின்வரிசையில் உள்ள தலைவர்களிடம் கைக்குலுக்கினார். 

இந்திய நாட்டின் பிரதமர் மோடியை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்று காணொலி ஒன்று வைரலாகியுள்ள நிலையில் சர்வதேச ஊடகங்களிலும் அது தொடர்பாக விவாதங்கள் கிளப்பிவிடப்பட்டுள்ளது. 

இப்படிதான் கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, நரேந்திர மோடிக்கு வணக்கம் என்று இரு கரம் கூப்பி நிற்கிறார். அதற்கு பதில் கூறாமல் அவரைத் தாண்டிச் சென்று  அடுத்து நின்றிருந்த  அவமதித்தார் என்றும் மற்ற தலைவர்களோடு கைக்குலுக்கி கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. அத்வானிக்கு அடுத்து நின்றிருந்த மாணிக் சர்க்காரிடம் மோடி வணக்கம் சொல்லி பேசிய இந்த சம்பவம் திரிபுரா முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது. 

தன் வினை தன்னை சுடும் என்பதற்கேற்ப அன்று பிரதமர் நரேந்திர மோடி அத்வானியை அவமதித்த சம்பவம் தான் இன்று அவருக்கு ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பரவலாக சொல்லப்படுகிறது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset