நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரவுகளை அழிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது டெல்லி: 

வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும்போது அதில் பதிவான டேட்டாவை அழிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் எனும் ஏடிஆர்  தாக்கல் செய்த மனுவில், வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப இல்லை.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் நிரந்தரமாக இருக்கும் டேட்டாக்களை சரிபார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேர்தலுக்குப் பின்னர் யாராவது விவரங்கள் கோரினால், அவர் முன்னிலையில், பொறியாளர் ஒருவர் வாக்குப் பதிவு இயந்திரத்தை சரிபார்த்து, அதில் நிரந்தரமாக உள்ள டேட்டா அல்லது மைக்ரோ சிப்களில் மோசடியான வழியில் எவ்வித மாற்றமோ, சேதமோ செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழித்தல், மீள்பதிவேற்றுதல் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset