நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயிலில் ஏசி கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கும்பமேளா பயணிகள்

புது டெல்லி:

பிகார் மாநிலத்தில் இருந்து மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏசி பெட்டியின் ஏற கண்ணாடியை உடைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கோடிக்கணக்கான  பக்தர்கள் நீராடியுள்ளனர்.  

மேலும் பலர் வாகனங்களில் குவிவதால் 300 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திரதா சேனானி விரைவு ரயிலில் பிகாரின் மதுபானி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அதில் முண்டியடித்து ஏற பயணிகள் முயன்றனர்.

ரயிலின் பொது, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நிரம்பியிருந்தன.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயிலில் ஏற முடியாததால் விரக்தியடைந்த பயணிகள், ஏசி பெட்டிக்குள் நுழைய முயன்றனர்.

அப்பெட்டிகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் கண்ணாடிகளை உடைத்து அவர்கள் நுளைய முயன்றனர்.
இதில் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset