நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறுபான்மையினரை மத்திய அரசு ஒடுக்க முயற்சி: நவாஸ்கனி எம்பி குற்றச்சாட்டு

புது டெல்லி: 

இந்தியாவின் சிறுபான்மையினரை ஒடுக்க ஒன்றிய அரசு முயல்வதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும், ராமநாதபுரம் எம்பியுமான கே.நவாஸ்கனி மக்களவையில் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பேசிய அவர்,
சிறுபான்மை மக்களுக்கு எதிரான பார்வையை பாஜக அரசு கடந்த 10 ஆண்டு காலம் தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்ந்து குறைக்கப்படுவதிலிருந்தும் இதை நாம் பார்க்க முடிகிறது. பட்டியல் சமூகத்திற்கும் பழங்குடியினருக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் வழங்கப்படும் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக, கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.6,360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ரூ.760 கோடி அதில் செலவு செய்யப்படவில்லை. வெளிநாடுகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கான ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்பிற்கு மிகச் சொற்பமான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை இந்த அரசு விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

வக்பு வாரியங்களில் நாங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கக்கூடிய சொத்துக்களை மேம்படுத்த ஒரு திட்டம் இருந்தது.

இந்த திட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் உதவி பெறும் வாய்ப்பும் இருந்தது. இதன் மீது நான் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றவுடன் ஆய்வு செய்தேன்.

இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்படக்கூடிய மாநிலங்களின் விவரங்களை விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கடன் உதவி திட்டத்தில் எந்த மாநிலத்துக்கும் அளிக்கப்படவில்லை எனத் தெரிந்தது.

இதற்கு, அந்த திட்டம் மத்திய வக்பு கவுன்சில் ஒப்புதல் அவசியமாகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படவே இல்லை.

எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் யாருக்கும் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

சிறுபான்மையினரின் வக்ஃபு சொத்துக்களில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் வருமானம் பெறவும் வழிவகை செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அந்த சொத்துக்களை மீட்பதற்கான எந்த திட்டமும் இல்லை.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்கும் வகையில் வக்பு திருத்த மசோதா இருக்க வேண்டும்.

இதைவிடுத்து, இந்த அரசு கொண்டு வரும் திட்டங்கள், சிறுபான்மை மக்களின் கல்வி ரீதியாகவும் ஒடுக்கு நோக்கிலும் உள்ளன. பொருளாதார ரீதியாகவும் எங்களை ஒடுக்கும் நோக்கமும் இதில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset