
செய்திகள் ASEAN Malaysia 2025
மியான்மார் நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் உதவ வேண்டும்: முஹம்மத் ஹசான்
லங்காவி:
மியான்மார் நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர ஆசியான் உதவ வேண்டும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவில் எல்லை தாண்டிய குற்றங்கள் அதிகரிப்பதற்கு பங்களித்த மியான்மார் நெருக்கடிக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் ஆசியான் சமாதான முன்னெடுப்புகளை விரைவுபடுத்த வேண்டும்.
மியான்மார் நெருக்கடி உள்நாட்டுப் பிரச்சினை அல்ல.
ஆசியான் குடும்பத்திற்குள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் அனுமதிக்க முடியாது.
இந்த ஆண்டு பிராந்தியத்தின் உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையின் இலக்குகளுக்கு ஏற்ப மியான்மாருக்கு ஆதரவு தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்