நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துங்கள்: சோனியா காந்தி

புது டெல்லி: 

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் அவர் பேசுகையில், 140 கோடி மக்களின் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.  

தற்போது  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சுமார்
14 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது.

2021ஆம் ஆண்டே அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நிகழாண்டு அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளும் எடுத்துரைக்கின்றன என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset