நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: மம்தா பானர்ஜி

புது டெல்லி: 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதில்லை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன.
 பின்னர் ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் யூனியன் தேர்தல்களில்  காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால், மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.

தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்  காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset