நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

61 ஆலயங்களுக்கு மானியம்; சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது: பாப்பாராயுடு

பத்துமலை:

தைப்பூசத்தை முன்னிட்டு 61 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு மானியம் வழங்கியது.

கிட்டத்தட்ட 561,000 ரிங்கிட் அவ்வாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

பத்துமலையில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முக்கிய அங்கமாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 61 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆலயங்களின் மேம்பாடு உட்பட இதில் நடவடிக்கைக்காக இந்த நிதி அவர் அந்த ஆலயங்களுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சிலாங்கூர் மாநில அரசு ஆலயங்களுக்கு இந்த நிதியை வழங்கி வருகிறது.

அனைத்து இனங்களில் சமய வழிபாடு உட்பட அனைத்து விவகாரங்களிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது இது காட்டுகிறது.

மேலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும்
சிலாங்கூர் மாநில அரசு பல திட்டங்களை கொண்டுள்ளது.

இந்த திட்டங்களை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset