நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்

 கோலாலம்பூர், 

தொடர்ந்து அழுததையே காரணமாகக் கொண்டு, மூன்று வயது ஆண் குழந்தையை பராமரிப்பாளரின் மகன் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவம், பத்து மூடா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த தாக்குதலால் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர், டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறுகையில், 18 வயதுடைய சந்தேகநபர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, குழந்தையின் அழுகை அந்த குழந்தை பராமரிப்பாளரை எரிச்சலடையச் செய்ததாகவும் அதனால் அவர் குழந்தையைத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

“இதன் தொடர்பாக அந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இன்று முதல் நான்கு நாட்கள் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

கண் பகுதியில் காயமடைந்த குழந்தையின் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் (HKL) குழந்தைகளது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஃபாடில் கூறினார்.

முன்னதாக, மாலை சுமார் 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தையைப் பராமரிப்பாளர் வீட்டில் இருந்து குழந்தையை அழைத்துச் சென்றபோது, இடது கண் பகுதியில் காயமும் வீக்கமும் இருப்பதை கவனித்தபின் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் குழந்தையை கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றனர். பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜிஞ்ஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு, குழந்தைகளின் சட்டப் பிரிவு (2001), 31(1)(a) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset