நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்

லங்காவி:

ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது.

மஹிமாவின் தேசியத் தலைவர்  டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மஹிமாவின் தலைவராக பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் உள்ள ஆலய நிர்வாகங்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தி வருகிறோம்.

இப்பயணத்தின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்புக் கூட்டம் இன்று லங்காவியில் நடைபெற்றது.

குறிப்பாக லங்காவி ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான ஆலய நிர்வாகத்துடன் சந்திப்புக் கூட்டம் நடந்தது.

இச்சந்திப்பின் போது இவ்வாலய பிரச்சினைகள் குறித்து நிர்வாகம் விளக்கம் அளித்தது.

என்னை பொறுத்த வரையில் ஆலயம், சமயப் பிரச்சினைகளுக்கு உடனடியாக சுமூகமான முறையில் தீர்வுக் காணப்பட வேண்டும்.

இதில் நீ பெரியவரா? நான் பெரியவரா என்று பார்த்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

ஆலயம், சமயம் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இதுவே எனது கோரிக்கையாகும் என்று லங்காவி ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான ஆலயத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ சிவக்குமார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset