நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்:

11 வயது மாணவர் ஒருவரை அவரது சமய ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (OCPD) உதவி ஆணையர் முஹம்மது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த புகாரில், கம்புங் பண்டான் பகுதியில் அமைந்துள்ள ஒரு சமயப் பள்ளியில் பயிலும் மாணவரைச் சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் (2017) பிரிவு 14(d)இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதாக ACP முஹம்மது லாசிம் கூறினார்.

- சங்கீர்த்தனா முருகன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset