நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்

லங்காவி:

அனைத்து பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

மஹிமா தலைவர்  டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மஹிமாவின் ஆலய நிர்வாகங்களுடனான சந்திப்புக் கூட்டம் இன்று லங்காவியில் நடைபெற்றது.

ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயம் உட்பட பல ஆலயங்களுக்கு சென்றேன்.

அங்குள்ள ஆலய நிர்வாகங்களுடன் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினேன்.

லங்காவி தீவாக இருந்தாலும் இங்கும் அதிகமான ஆலயங்கள் உள்ளன. அதிகமான பக்தர்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் இங்குள்ள ஆலயங்கள் நிலப் பிரச்சினை, ஆலய பதிவு பிரச்சினை என பல்வேறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண மஹிமா அனைத்து ஆலயங்களுக்கு துணை நிற்கும்.

அதே வேளையில் பதிவு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மஹிமா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

மக்கள் சக்தியை மீறி எதுவும் இல்லை என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset