செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் பணியாற்றும் 400,000த்திற்கும் அதிகமான மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் பணியாற்றும் 400,000த்திற்கும் அதிகமான மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது அவர் வெளியிட்ட நான்கு முக்கிய அறிவிப்புகளில் கொள்கை சீர்திருத்தமும் ஒன்றாகும்.
மேலும் சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம்.
இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவதாக அவர் அறிவித்தார்.
புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன்.
மேலும் சிங்கப்பூரில் பணிபுரியும், ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் மலேசியர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறையைக் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
தொடரும் கனமழை: 6 மாநிலங்களில் 14,905 பேர் வெள்ளத்தால் பாதிப்பு
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
