நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்:

மலேசிய குடிநுழைவுத் துறை (JIM), ஜாலான் கிளாங் லாமா பகுதியில் மேற்கொண்ட அதிரடி அமலாக்க நடவடிக்கையில், பல்வேறு குடிவரவு குற்றச்சாட்டுகளின் கீழ் 90 வெளிநாட்டவர்களை கைது செய்தது. 

அந்த பகுதியில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கூடும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரவு 9.40 மணிக்கு நடைபெற்ற இந்த நடவடிக்கை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும், புத்ராஜெயாவில் உள்ள JIM தலைமையக அமலாக்கப் பிரிவு இரண்டு வாரங்கள் மேற்கொண்ட ரகசிய கண்காணிப்பின் அடிப்படையிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் 82 ஆண்கள், 34 பெண்கள் உட்பட 131 வெளிநாட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டதோடு, 15 உள்ளூர் குடிமக்கள் என மொத்தம் 146 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் முடிவில், 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 90 வெளிநாட்டவர்கள், காலாவதியான விசா, சட்டபூர்வ பயண ஆவணங்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நைஜீரியா, ஏமன், சிரியா, சோமாலியா, கினியா-பிசாவ், சியரா லியோன், லைபீரியா, மாலி, இந்தோனேசியா, மியான்மர், பங்களாதேஷ், வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த வெளிநாட்டவர்கள் காலாவதியான பாஸ்களை மறைவாக பயன்படுத்தி, திறந்த இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், மக்கள் கூடும் கடைகள் என மட்டுமல்லாமல் உணவகங்களில் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று JIM தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தங்குதலோ அல்லது காலக்கெடு மீறிய பாஸ்களை தவறாக பயன்படுத்தும் எந்த வெளிநாட்டவர்களிடமும் சமரசம் செய்யப்படாது என  JIM தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சட்ட் விரோத அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தி பாதுகாப்பளிக்கும் கடை உரிமையலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிநுழைவு துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset