நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடரும் கனமழை: 6 மாநிலங்களில் 14,905 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூர்,   
                                                                                                                                                                                      நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இன்று காலை 7 மணி நிலவரப்படி, 6 மாநிலங்களில் 14,905 பேர் வெள்ளத்தால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். சுமார்  4,837 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 110 தற்காலிக இடம்பெயர்வு முகாம்களில் (PPS) தஞ்சம் புகுந்துள்ளனர்.

சமூக நலத்துறை (JKM) ‘இன்ஃபோ பஞ்சிர்’ தகவலின்படி, மொத்தம் 4,895 பேர் பாதிக்கப்பட்டவர்களாவர். அதில் 1,400 பேர் மூத்த குடிமக்கள் எனவும், 512 மாற்றுத் திறனாளிகள் (OKU) என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வெள்ளாத்தால் 4735 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 444 பச்சிளம் குழந்தைகளாகும் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பஹாங் மாநிலம் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக முகாம்களுடன் முன்னிலையில் உள்ளது. குவாந்தான், மரான், ரொம்பின், பெகான், ஜெரான்டுட், லிப்பிஸ் ஆகிய ஆறு மாவட்டங்களில் 82 முகாம்கள் திறக்கப்பட்டு, 4,436 குடும்பங்களைச் சேர்ந்த 13,481 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திரெங்கானு மாநிலத்தில், மூன்று மாவட்டங்களில் 18 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 247 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

கிளந்தான் மாநிலத்தில், நான்கு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு, 45 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே, ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங்கில், மூன்று முகாம்களில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

பஹாங் மாநிலத்தில் 11 நதிகள் அபாய நிலையை எட்டியுள்ளன. அதேபோல், கெலந்தானில் ஒரு நதியும், சரவாகில் இரண்டு நதிகளும் அபாய நிலையில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கிளாந்தான் மாநிலத்தில், கோலா துவாலாங், கோலா கிராய் பகுதியில் உள்ள லேபிர் நதி அபாய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset