நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டு சிறைகளில் 10,512 இந்தியர்கள்

புது டெல்லி: 

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியர்கள் அடைபட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷியா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், அர்ஜென்டீனா உள்பட 86 நாடுகளின் சிறைகளில் மொத்தம் 10,152 இந்தியர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 2,633 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,518 பேரும் சிறையில் உள்ளனர்.

பாகிஸ்தான் 166, இலங்கையில் 98 பேர் சிறையில் உள்ளனர். கத்தார் சிறைகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 611 பேர் உள்ளனர்.

இது தொடர்பாக அங்குள்ள தூதரகங்கள் கண்காணித்து வருகின்றன. அவர்களின் வழக்குகளை எதிர்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு சட்டங்களை மதிக்காமை, கொலை, அத்துமீறி ரகளையி ஈடுபடுதல்,  விசா இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கி இருத்தல், போதை, கடத்தல் என்று பல்வேறு குற்றப் பின்னணியில் அவர்கள் சிறையில் உள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset