நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேலும் 487 கள்ளத்தனமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா

வாஷிங்டன்: 

சட்டவிரோதமாக கள்ளத்தனமாக குடியேறிய 104 பேரை நாடு கடத்திய அமெரிக்கா தற்போது மேலும் 487 பேரை அனுப்ப உள்ளது.

104 பேர்கள் கை - கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்க அதிகாரிகள் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர்; இவர்களில் 298 பேரின் விவரங்கள் ஒன்றிய அரசிடம் பகிரப்பட்டுள்ளது.

மேலும்,  இந்தியர்கள் தவறாக நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

அதற்கு பதில் ஏதும் அமெரிக்கா தரப்பிலிருந்து சொல்லப்படவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset